மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
21 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
21 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
21 hour(s) ago
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 2024- - 25ம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதற்கு கால்நடை துறையினர் விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர்.இதற்காக, 1 ஏக்கரில் பசுந்தீவனம் ஊடுபயிராக செய்தால், 3,000 ரூபாய் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில், திருத்தணி - 40, திருவள்ளூர் - 60, பொன்னேரி - 25 ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களில், மொத்தம் 125 ஏக்கர் பரப்பில் பசுந்தீவனம் செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தீவன பயிர்களை நீர்ப்பாசன வசதியுடன், அரை ஏக்கருக்கு குறையாமலும், 2.5 ஏக்கருக்கு மிகாமலும் பயிரிட தயாராக இருக்க வேண்டும்.தானியங்கள், புற்கள், பருப்பு வகைகள், மேய்ச்சல் புற்கள் போன்ற தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டம் வாயிலாக பயன்பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இந்த பயனாளிள் கலெக்டர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்படுவர் என, மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago