உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீவாக மாறும் கிராமம்: தரைப்பாலம் கட்டுவதே தீர்வு

தீவாக மாறும் கிராமம்: தரைப்பாலம் கட்டுவதே தீர்வு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது, ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சின்னம்மாபேட்டை அல்லது தக்கோலம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதிக்கு செல்ல ஜே.எஸ்.ராமாபுரம் ஓடையை கடந்து செல்ல வேண்டும்.ஆனால், ஓடையில் ஆண்டும் முழுதும் நீர் செல்லும். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 6 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும். இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் ஓடையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். மேலும், 10 -- 20 நாட்கள் வரை வீட்டில் முடங்கும் அவலநிலை உள்ளது. இல்லையென்றால், 10 கி.மீ., சுற்றிக்கொண்டு, அரக்கோணம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.எனவே, ஜே.எஸ்.ராமாபுரம் ஓடைக்கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை