உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அகில இந்திய கிரிக்கெட் போட்டி விவேகானந்தா கல்லுாரி சாம்பியன்

அகில இந்திய கிரிக்கெட் போட்டி விவேகானந்தா கல்லுாரி சாம்பியன்

சென்னை:சாய்ராம் பொறியல் கல்லுாரி சார்பில், கல்லுாரியின் நிறுவனர் லியோ முத்து நினைவுக் கோப்பைக்கான, இரண்டாம் ஆண்டு அகில இந்திய கிரிக்கெட் போட்டி நடந்தது. தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், கடந்த 23ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இப்போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 20 ஓவர்கள் அடிப்படையில் நடந்த அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., மற்றும் விவேகானந்தா அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. டாஸ் வென்ற விவேகானந்தா அணி, முதலில் பேட் செய்து, 20வது ஓவரில் தன் கடைசி விக்கெட்டை இழந்து, 120 ரன்களை எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த, எஸ்.ஆர்.எம்., அணி போராடி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழந்து, 119 ரன்களை அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.சாம்பியன் பட்டம் வென்ற விவேகானந்தா அணிக்கு, 1 லட்சம் ரூபாயும், எஸ்.ஆர்.எம்., அணிக்கு, 75,000 ரூபாயும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஜேப்பியார் அணி முதலில் பேட்செய்து, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 124 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய குருநானக் அணி, 14 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து, 125 ரன்களை அடித்து வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, சாய்ராம் கல்வி குழுமத்தின் தாளாளர் சாய்பிரகாஷ் லியோ முத்து பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ