உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏசி வசதியுடன் 2 ரயில்கள் சென்னைக்கு ஒதுக்கீடு

ஏசி வசதியுடன் 2 ரயில்கள் சென்னைக்கு ஒதுக்கீடு

சென்னை : சென்னையில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க, 'ஏசி' வசதியுடன் இரண்டு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், 'ஏசி' ரயில்களை இயக்க, ரயில்வே வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டது.சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான 'கும்டா' இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயிடமும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க, 12 பெட்டிகள் கொண்ட 'ஏசி' வசதியுள்ள, இரண்டு மின்சார யூனிட் ரயில்கள் தெற்கு ரயில்வேக்குஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ