உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலியல் வன்முறைகளை தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு

பாலியல் வன்முறைகளை தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு

பொன்னேரி:பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பாலியல் வன்முறையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், கல்லுாரி முதல்வர் முனைவர் ஜெயசகிலா தலைமையில் நேற்று நடந்தது. அவர் மாணவர்களிடம் பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.ஆவடி கமிஷனரக எஸ்.ஐ., கவிதா பங்கேற்று மாணவர்களுக்கு பல்வேறு சட்ட ஆலோசனைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.பேராசிரியர்கள் சுருளிவேல், நிமிஸ்மோல் ஸ்டீபன் ஆகியோர் பாலியல் வன்முறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் பேசினர்.கூட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்கள் எதனால் ஏற்படுகிறது, பாலியல் வன்முறை தடுப்புக்காக காவல் துறையில் என்னென்ன வசதிகள் உள்ளன, பெண்களை பாதுகாப்பதில் சமூகப் பொறுப்புகள், போதைப் பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை, காவல்துறை பொதுமக்களுக்கு எப்படி நண்பனாக செயல்படுகிறது, காவல்துறை சேவைகள், அவற்றை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மாணவர்கள் - பெண்கள் எவ்வாறு பயன்படுத்துவது என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும் வகையில் பல்கலை மானிய குழு ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பாலியல் வன்முறை தடுப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்குழுவினரிடம், இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை