உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்க மதகு அருகில் கரை சேதம்

பூண்டி நீர்த்தேக்க மதகு அருகில் கரை சேதம்

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்க மதகு அருகில், கரை சேதமடைந்துள்ளதால், நீர்த்தேக்கம் வலுவிழக்கும் நிலை உள்ளது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும். இங்கு, மழை காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தற்போது, பூண்டி நீர்தேக்கத்தில், 0.75 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. உபரி நீர், மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. அதிகளவு தண்ணீர் தேங்கியதால், நீர்தேக்கத்தின் உட்பகுதியில் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த, சிமென்ட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, நீர்தேக்க கரை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணி துறை-நீர்வள ஆதாரம், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த நீர்தேக்கத்தின் உட்பகுதி கரையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி