உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி

நிழற்குடை இல்லாத நிறுத்தம் பராசங்குபுரம் பயணியர் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்டது பராசங்குபுரம். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதி வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகளை பயன்படுத்தி பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் மட்டும் உள்ளன. நிழற்குடை இல்லாததால் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடைக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பராசங்குபுரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை