உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு

நாயை அடித்து கொன்று 4 சவரன் திருட்டு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சுமதி, 49. கடந்த, மே மாதம் கணவர் இறந்த நிலையில், சுமதி தனியாக வசித்து வருகிறார். வீட்டின் அருகிலேயே சிறியதாக மளிகை கடை வைத்துள்ளார்.கடந்த, 29ம் தேதி, சொந்த ஊரான கும்பகோணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை, வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, நான்கு சவரன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.மேலும், இவர் வளர்த்த வந்த நாய் ஒன்றும் வீட்டின் பின்புறம் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தது. நள்ளிரவில் திருட்டிற்கு வந்த நபர்கள், இடையூறு ஏற்படுத்திய நாயை அடித்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது.இது குறித்து சுமதி, நேற்று பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி , போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ