உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளேஸ்பாளையம் சாலை சேதம் கிராமவாசிகள் கடும் அவதி

பிளேஸ்பாளையம் சாலை சேதம் கிராமவாசிகள் கடும் அவதி

திருவள்ளூர்:பிளேஸ்பாளையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் சாலை சேதமடைந்திருப்பதால், கிராமவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிளேஸ்பாளையம் கிராமம். ஆந்திர மாநில எல்லையை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளது. இந்த வழியாக ஆந்திர மாநிலம் நாகலாபுரம், கனகம்மாசத்திரத்திற்கும், தமிழக பகுதியான சிவாடா, திருத்தணிக்கும் சென்று வரலாம். இந்த கிராமத்தில் இருந்து, தமிழக எல்லையில் ஒன்றரை கி.மீட்டர் துாரம் வரை சாலை சேதமடைந்து, பெரிய, பெரிய கற்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால், தமிழக எல்லை பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள், தோட்டத்திற்கு சென்று வருவோர், வாகனங்களில் செல்ல முடியாமலும், நடக்க முடியாமலும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநில பகுதியில் இருந்து சவுடு மண் எடுத்து வந்த லாரிகளால், இந்தசாலை சேதமடைந்ததாக, கிராமவாசிகள் தெரிவித்தனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.l கடம்பத்துார் ஊராட்சியில் ஸ்ரீதேவிக்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதிலிருந்து வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக காரணி, விடையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து, மண் சாலையாக இருந்தது.இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் பேருந்து நிறுத்தம் பகுதியில் 200 மீ., துாரத்திற்கு சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சாலையில் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த ஏரிக்கரை சாலையை வெண்மனம்புதுார், செஞ்சி பானம்பாக்கம், காரணி மற்றும் விடையூர் செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி