| ADDED : மே 28, 2024 05:43 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊராட்சி வழியே தினமும் அரசு, தனியார் தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி, பேருந்து, கனரக, இரு சக்கர வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் பகல் நேரங்களில் நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன.இதனால், இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதோடு விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.