உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிமென்ட் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சிமென்ட் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையில் இருந்து ஜமீலாபாத், தோணிரவு, செஞ்சியம்மன் நகர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை, கடந்த, 2016ல், வர்தா புயலின்போது சேதமானது.சாலையின் சரிவுப்பகுகளில் இருந்து மண், பாறைகற்கள் அரித்து செல்லப்பட்டன. சிமென்ட் சாலையின் அடிப்பகுதி அந்தரத்தில் இருக்கிறது.எட்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை சாலையை சீரமைப்பதில் ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், தற்போது அந்தரத்தில் இருந்த சாலைகள் உடைந்து, விரிசல்கள் ஏற்பட்டு வருகிறது.உடைந்த பகுதிகளை கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். குறுகலாக உள்ள சாலையில், எதிர் எதிரே வாகனங்கள் சந்திக்கும்போது, சரிவில் விழும் அபாயம் உள்ளது.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட சாலையின் இருபுறமும் சரிவுப்பகுதிகளை பாறை கற்கள் பதித்து பலப்படுத்திடவும், சேதம் அடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும் வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை