மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
5 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
5 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
5 hour(s) ago
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே துராபள்ளம் பஜார் பகுதி உள்ளது. அப்பகுதியில், வங்கிகள், பள்ளிகள், கோவில்கள், மசூதி, மீன் மார்க்கெட் மற்றும், 200க்கும் மேற்பட்டகடைகள் உள்ளன.எப்போதும் பரபரப் பாக காணப்படும் துராபள்ளம் பஜார் மீது தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் செல்கிறது.மேம்பாலம் மற்றும் துராபள்ளம் பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன், சாலையோர கட்டடங்கள்இடித்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.பஜார் பகுதியில், மக்கள் சென்று வர மாற்று சாலை ஏற்படுத்தாமல், கடந்த நான்கு மாதகாலமாக, மேம்பால விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மக்கள் பயன்படுத்தும் சாலை முழுதும் சகதிகளாகவும், மழைநீர் குட்டை களாகவும் மாறியுள்ளன.அதன் வழியாகசெல்லும் வாகன ஓட்டிகள், சகதியில் வாகனத்தை செலுத்த முடியாமல்தடுமாறியபடி வருகின்றனர். பலர் நிலை குழைந்து விழுந்து படுகாயம் அடைந்து வருவதாக பகுதிவாசிகள்தெரிவிக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக துராபள்ளம் பஜார் பகுதியில் மாற்று சாலை ஏற்படுத்த வேண்டும் என பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago