| ADDED : மே 11, 2024 09:43 PM
ஊத்துக்கோட்டை:சென்னை, தாம்பரத்தில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு லக்சிதா, 3 என்ற பெண் குழந்தை இருந்தது. விடுமுறைக்காக அசோக், மனைவி மகளுடன் வெங்கல் அடுத்த மாகரல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வீட்டின் அருகில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்தது.சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்ததில், இறந்தது தெரிந்தது. இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.