உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுச்சுவர் இல்லாத குழந்தைகள் மையம்

சுற்றுச்சுவர் இல்லாத குழந்தைகள் மையம்

கனகம்மாசத்திரம்:பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15 குழந்தைகள் படிக்கின்றனர்.மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 25 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தின் பின்புறத்தில் குளம் உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், நீர்நிலைகள் மற்றும் அருகே உள்ள முட்புதர்களில் இருந்து விஷ பூச்சிகள் வலம் வருகிறது. அருகே குளம் இருப்பதால், குழந்தைகள் விளையாடும் போது, தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை