கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது.கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சி பகுதிவாசிகள் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பகுதிவாசிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பெறலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறித்தியுள்ளதாக கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.மணிசேகர் தெரிவித்துள்ளார்.காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும் முகாமில் வருவாய், வேளாண், என பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பகுதிவாசிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
தேதி - இடம் - ஊராட்சிகள்
ஆக.6 - வெங்கடேஸ்வரா மகால், வெங்கத்துார் - வெங்கத்துார், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், நுங்கம்பாக்கம்.ஆக.7 - கிராம சேவை மையம், பாப்பரம்பாக்கம் - வலசைவெட்டிக்காடு, கொப்பூர், வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், இலுப்பூர், புதுவள்ளூர் ஆக.8 - மீனாட்சி ராமகிருஷ்ணா மஹால், பேரம்பாக்கம். - பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரச்சேரி, கூவம், சத்தரை, புதுமாவிலங்கை, காவாங்கொளத்துார், சிற்றம்பாக்கம்ஆக.9. - பிருந்தாவம் திருமண மஹால், மப்பேடு. - மப்பேடு, கண்ணுார், கீழச்சேரி, கல்லம்பேடு, புதுப்பட்டு, திருப்பந்தியூர், கொண்டஞ்சேரி, கொட்டையூர், எறையாமங்கலம்.ஆக.12 - சம்பந்தம் செட்டியார் திருமண மண்டபம், கடம்பத்துார். - கடம்பத்துார், பிரையாங்குப்பம், ஏகாட்டூர், விடையூர், ராமன்கோவில், செஞ்சி, அதிகத்துார், பிஞ்சிவாக்கம், தண்டலம். ஆக.13 - கிராம சேவை மையம், வயலுார். - வயலுார், தொடுகாடு, உளுந்தை, திருமணிக்குப்பம், முதுகூர்.***