உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் தங்கிய பங்களா வளாகம் அன்று அலங்காரம்; இன்று அலங்கோலம்

கலெக்டர் தங்கிய பங்களா வளாகம் அன்று அலங்காரம்; இன்று அலங்கோலம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூர் காலனியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடம் அமைந்துள்ளது. சமீபத்தில், பள்ளிப்பட்டு தாலுகாவில், கலெக்டர் பிரபுசங்கர் முகாம் அமைத்து, பகுதிவாசிகளிடம் மனுக்களை பெற்றார்.இரண்டு நாட்கள் நடந்த இந்த முகாமின் போது, காக்களூரில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் தங்கினார். இதற்காக, அந்த கட்டடம் புனரமைக்கப்பட்டது.இந்த கட்டடம் அமைந்துள்ள வளாகமும், முழுவீச்சில் சீரமைக்கப்பட்டது. கட்டட வளாகத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. தற்போது, அந்த வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதற்கு வசதியாக, அங்கு கொட்டப்பட்ட மண்ணும் தோண்டப்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவுநீரும் தேங்கியுள்ளதால், அந்த வழியாக செல்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, இப்பகுதிவாசிகளின் நலன் கருதி, தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ