மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
21 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
21 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
மீஞ்சூர்: மீஞ்சூர் ஒன்றியம், ஏருசிவன் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெரு ஒன்று மற்றும் இரண்டில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்காக, ஆறுமாதங்களுக்கு முன், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தெருக்களின் இருபுறமும் ஒரு அடி உயரத்திற்கு, கான்கிரீட் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன.இடையில் உள்ள பகுதியில் மண் நிரப்பி, அதில் பேவர்பிளாக் கற்களை பதித்து சாலை அமைக்கவேண்டிய நிலையில், அப்பணிகள் கடந்த, ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன.மழைக்காலங்களில் இருபுறமும் அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே மழைநீர் தேங்குகிறது. ஒவ்வொரு வீட்டின் நுழைவுப்பகுதியிலும், இருக்கும் கான்கீரிட் கட்டுமானத்தால் வாகனங்கள் வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கும், வெளியில் எடுப்பதற்கும் கிராமவாசிகள் சிரமப்படுகின்றனர்.சாலைப்பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டதால் கிராமவாசிகள் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. அரைகுறையாக விடப்பட்ட சாலைப்பணிகளை முழுமையாக முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025