உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு

திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு மற்றும் 'விவிபேட்' இயந்திரம், நேற்று முன்தினம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டது.தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான க.தீபா துவக்கி வைத்தார். பணிகள் முடிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அங்குள்ள அறைகள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் 'சீல்' வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை