மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
30-Dec-2025
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகள் தனியார் கல்லுாரியில் பயில கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் பிரிவு 32(1)ன் படி மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் கல்லுாரி சேர்க்கை பெறுவதில் பின்தள்ளப்பட்டு, அவர்களது உரிமை மறுக்கப்படுகிறது. இவற்றை களைந்து கல்வி பயில்வதில் கல்வி உரிமைகளை 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க பெற செய்ய வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியர் பயனடையும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்லுாரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையலாம். கட்டண சலுகை வழங்கப்படும் கல்லுாரி விவரம்: சவீதா மருத்துவக்கல்லுாரி, பூந்தமல்லி; ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லுாரி, போரூர், செயின்ட் பீட்டர் கல்லுாரி, ஆவடி, வேல்டெக் கல்லுாரி, ஆவடி. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 044- 27662985, 94999 33496 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
30-Dec-2025
29-Dec-2025