உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திர அரசு பஸ் மோதி கண்டக்டர் உயிரிழப்பு

ஆந்திர அரசு பஸ் மோதி கண்டக்டர் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் எத்திராஜ், 52. இவர். தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் தன் இருசக்கர வாகனத்தில், திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் பகுதிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.அப்போது, திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி புதிய பைபாஸ் சாலை அருகே, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து மோதியது.இதில், எத்திராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை