உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச வீட்டுமனை வழங்க ஜமாபந்தியில் கவுன்சிலர் மனு

இலவச வீட்டுமனை வழங்க ஜமாபந்தியில் கவுன்சிலர் மனு

திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. மொத்தம் 74 வருவாய் கிராமங்களுக்கு பிர்கா வீதம் தேதி ஒதுக்கீடு செய்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறார். நேற்று திருத்தணி பிர்காவிற்கான நடந்த ஜமாபந்தியில், திருத்தணி நகராட்சி, 21வது வார்டு அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் விஜய்சத்யா பங்கேற்று, எங்கள் வார்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பலர் வீட்டுமனைகள் இல்லாமல் வாடகை வீடுகளிலும், குடிசையிலும் தங்கி வருகின்றனர்.அவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.மனுவை பெற்ற கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் பிற துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை