உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி:திருத்தணி நகராட்சி கவுன்சிலர்களின் அவசர கூட்டம், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் அருள் வரவேற்றார்.கூட்டத்தில், வரவு - -செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை, குளியல் அறைகள் போன்றவை ஏற்பாடு செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், சுகாதார பணிகளுக்கு திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைத்து, துாய்மை பணிகள் மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை