உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்டவாளத்தில் விரிசல் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

தண்டவாளத்தில் விரிசல் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த சித்தேரி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சென்னை - பெங்களூரு வரை செல்லும் 'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்கு பின் விரிசல் சரிசெய்து, ரயில்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை