உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்

மணவாள நகர் மேம்பால நடைபாதை சேதம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கூவம் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் நடைபாதை சேதமடைந்துள்ளதால், நடைவாசிகள் சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர்- மணவாள நகர் சாலையை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, திருவள்ளூர், திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும் இப்பாலத்தை கடந்து வருகின்றன.மேம்பாலத்தின் இருபகுதியிலும், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலையில் பகுதிவாசிகள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வோர், மேம்பால நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேம்பாலத்தின் இருபகுதியிலும் நடைபாதை சேதமடைந்து, பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது.இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் திறந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை