உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனப்பாக்கத்தில் சேதமான தொகுப்பு வீடுகள் உயிர் பலி வாங்கியும் விமோசனம் இல்லை

பனப்பாக்கத்தில் சேதமான தொகுப்பு வீடுகள் உயிர் பலி வாங்கியும் விமோசனம் இல்லை

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், பனப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாக்கம் மேட்டுக்காலனி கிராமத்தில், கடந்த, 30ஆண்டுகளுக்கு முன், 35 குடும்பத்தினருக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.நாளடைவில் இவை பலவீனம் அடைந்து, கூரைகள், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழத்துவங்கின. 2021, டிசம்பர், 21ம் தேதி ஒரு வீடு இடிந்து ஒரு உயிர் பலியையும் வாங்கியது.சேதமான குடியிருப்புகளில் ஒன்றில் கூலித்தொழிலாளி சாமிநாதன், 69, என்பவர் மீது கூரையில் இருந்து சிமென்ட் சாரை பெயர்ந்து விழுந்தது. அதில் அவர் இறந்தார்.அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். அதேசமயம் மேற்கண்ட சேதமான குடியிருப்புகளுக்கு இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை.தற்போது குடியிருப்புகள் மேலும் மோசமான நிலையில் இருக்கின்றன. புதிய வீடு கட்டுவதற்கும், சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்கவும் நிதிவசதி இல்லாத நிலையில், வேறு வழியின்றி உயிர் பயத்துடன் கிராமவாசிகள் தொடர்ந்து அவற்றில் வசித்து வருகின்றனர்.இது குறித்து தொகுப்பு வீடுகளில் வசித்து வருபவர்கள் கூறியதாவது:கூரை விழுந்து இறந்த சாமிநாதனுக்கு இதுவரை எந்தவொரு அரசு உதவியும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த அன்று, பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை எந்த அதிகாரியும் இங்கு வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை.சேதம் அடைந்து இருக்கும் தொகுப்பு வீடுகளால் மேலும் எத்தனை உயிர்பலிகள் ஏற்படுமோ என தெரியவில்லை. அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே வரும் அதிகாரிகள், அதை தவிர்க்க முன்வருவதில்லை. மழைக்காலங்களில் மரண பயத்துடன் வசதிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் எங்களின் நிலையை உணர்ந்து, உதவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை