உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை

வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:வடமதுரை ஊராட்சியில் வடமதுரை, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம் உள்ளிட்ட, 13 கிராமங்கள் உள்ளன. இதில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம், கால்நடை வளர்த்தல் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உள்ளன.ஊராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், மற்ற ஊராட்சியை ஒப்பிடும் போது, நலத்திட்ட உதவிகள் பெற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த கிராம மக்களின் நலன் கருதி, வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை