உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட செயலரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,வுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டதின்போது, தமிழக மக்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி., வரி வசூல் செய்யும் மத்திய அரசு, பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து உள்ளதாகவும், தமிழகத்தை ஒன்றிய அரசு மாற்றான்தாய் மானப்பான்மையோடு நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, மக்கள் நலத்திட்டங்களுக்காக, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. பழிவாங்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டு, சாலை, மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை