உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

திருத்தணி:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 65. இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்துார் ரயில்வே கேட் பகுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். ரயில்வே துறையில் சப்-- காண்ட்ராக்டர் பணிகள் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, முனுசாமி குளிப்பதற்காக அருகே உள்ள மின்மோட்டரை இயக்குவதற்கு, மின்ஒயர் எடுத்து பிளக்கில் நுழைப்பதற்கு முயன்ற போது, மின்சாரம் தாக்கி இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை