உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலர்கள் மோதல் முதியவர் பலி

டூ - வீலர்கள் மோதல் முதியவர் பலி

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 63. இவர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் ஆற்காடுகுப்பம் பேருந்து நிலையத்திற்கு சென்றார். சென்னை—திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திரும்ப முயன்றார். அப்போது திருவள்ளூர் இருந்து திருத்தணி நோக்கி வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், ஏழுமலை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த திருவள்ளூர் பூங்காநகர் பரத், 22, குன்றத்துார் ஜெகநாதபுரம் தீபக்,22 ஆகிய இருவரும் படுகாயம் அடைத்தனர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி