உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழில் முனைவோர் திட்டம் 111 பேர் பங்கேற்பு

தொழில் முனைவோர் திட்டம் 111 பேர் பங்கேற்பு

திருவள்ளூர்:மாவட்ட தொழில் மையம் வாயிலாக, தொழில் முனைவோர் திட்ட நேர்காணலில் 111 பேர் பங்கேற்றனர்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் தொழில் முனைவருக்கான, 'நீட்ஸ்' மற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனாளிகள் நேர்காணல் நேற்று நடந்தது.கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் வங்கி கடனுதவி பெறும் திட்டத்தில், 111 பயனாளிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தொழில் மைய பொது மேலாளர் சேகர், முன்னோடி வங்கி மேலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை