உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் பயோ மைனிங் முறையில் குப்பை கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றம்

பொன்னேரியில் பயோ மைனிங் முறையில் குப்பை கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றம்

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் சாலை அருகே, ஆரணி ஆற்றின் கரையோரங்களில், நீண்ட காலமாக கொட்டி குவிக்கப்பட்ட குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கி இருந்தன. இவை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள்.ஆற்றின் கரையோரங்களில், 5 ஏக்கர் பரப்பில் குவிந்துள்ள, 26,432 கன மீட்டர் அளவில், 2.11 கோடி கிலோ குப்பை கழிவுகளை 'பயோ மைனிங்' முறையில் முழுமையாக பிரித்தெடுக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.இதையடுத்து, 'துாய்மை இந்தியா - 2.0' திட்டத்தின் கீழ், 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.'பயோ மைனிங்' முறையில் கழிவுகளை அகற்றுவதற்காக ரோலர், கன்வேயர், இரும்பு சல்லடைகள் ஆகியவை பொருத்தப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் குவிந்து கிடக்கும் கழிவுகளை, கிளறி உலற வைத்து, பின், அவற்றை ரோலர் இயந்திரங்களில் கொட்டி பிரிக்கப்படுகிறது. ரோலர் இயந்திரத்தில் உள்ள சல்லடைகள் வழியாக மண், கல், பிளாஸ்டிக் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. கல், கண்ணாடி, இரும்பு உள்ளிட்டவைகளை ஒரு பகுதியிலும், மண் குவியல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், எஞ்சிய பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.நீண்ட காலமாக குவிந்திருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, மீட்கப்படும் நிலப்பகுதிகளை பசுமையாக மாற்றவும் திட்டமிடப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை