உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பசியாவரம் பாலத்தில் மின்விளக்கு பொருத்த மீனவர்கள் கோரிக்கை

பசியாவரம் பாலத்தில் மின்விளக்கு பொருத்த மீனவர்கள் கோரிக்கை

பழவேற்காடு:பழவேற்காடு - பசியாவரம் இடையே ஏரியின் குறுக்கே, 18.20 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்த பாலம் பசியாவரம், சாட்டன்குப்பம், இடமணி உள்ளிட்ட, ஐந்து கிராமங்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனர். பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடக்கிறது. நடந்து செல்வோர் தடுமாற்றமான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:அத்தியாவசிய தேவைகளுக்கு பழவேற்காடு பஜார் பகுதிக்கே செல்ல வேண்டும். மீனவர்கள் தொழிலுக்கு சென்று, மாலையில் வீடு திரும்பிய பின் வழங்கும் பணத்தை கொண்டு, பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்று பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடப்பதால், பெண்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். எதிரில் வருபவர்கள் தெரியாத நிலையில், ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பாலத்தில் மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை