உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்

திருமழிசை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 17ல் கொடியேற்றம்

திருவள்ளூர்: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வரும் 19ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி காலை நடைபெறும். வரும் 25ம் தேதி மாலை பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

நாள் நேரம் நிகழ்ச்சி

17ம் தேதி காலை 6:00 மணி கொடியேற்றம்17 ம் தேதி மாலை 7:00 மணி தங்க தோளுக்கினியான்18ம் தேதி காலை 7:00 மணி சூர்ய பிரபை18ம் தேதி மாலை 7:00 மணி யாளி வாகனம்19ம் தேதி காலை 7:00 மணி கருட சேவை19ம் தேதி காலை 8:00 மணி திருமழிசை ஆழ்வார் தங்கதோளுக்கினியான்20ம் தேதி காலை 7:00 மணி சேஷவாகனம்20ம் தேதி மாலை 7:00 மணி சந்திரபிரபை21ம் தேதி காலை 7:00 மணி பல்லக்கு - மோகினி அவதாரம்21ம் தேதி மாலை 7:00 மணி அம்ச வாகனம்22ம் தேதி காலை 7:00 மணி சூர்ணாபிேஷகம், விமானம்22ம் தேதி மாலை 7:00 மணி யானை வாகனம்23ம் தேதி காலை 7:00 மணி தேரோட்டம்23ம் தேதி மாலை 7:00 மணி மாடவீதி உற்சவம்24ம் தேதி காலை 7:00 மணி பல்லக்கு24ம் தேதி மாலை 7:00 மணி குதிரை வாகனம் வேடுபறி25ம் தேதி காலை 7:00 மணி ஏழூர் புறப்பாடு , தீர்த்தவாரி உற்சவம்25ம் தேதி மாலை 7:00 மணி கொடியிறக்கம்26ம் தேதி மாலை 7:00 மணி ஸ்ரீபுஷ்பயாகம், ஸப்தாவரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை