| ADDED : ஆக 06, 2024 10:59 PM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, மல்லியங்குப்பம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன், 34. தன் வீட்டில் கூண்டு அமைத்து, 20க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வந்தார். கடந்த, 6ம் தேதி ஒன்பது கோழிகளை காணவில்லை. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்படி பெரியபாளையம் போலீசார் கோழிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் பெரியகிளாம்பாக்கம் தன்ராஜ், 23, முகேஷ், 20, கவியரசு, 20, பிரவீன்குமார், 19 ஆகிய நான்கு பேரை விசாரித்ததில் கோழிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.