உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி

வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி

திருவள்ளூர்: வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பும் செவிலியருக்கு, இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வெளிநாடுகளில் சென்று பணிபுரிய செவிலியர்கள் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடுகளில் அவர்களுக்கான காலி பணியிடங்களும், தேவையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான 'Overseas Manpower Corporation Limited' நிறுவனம் வாயிலாக, இலவச வெளிநாட்டு மொழி பயிற்சியை, ஜெர்மன், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.இதில் கலந்து கொள்ள விரும்புவோர், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதள முகவரியில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgj0feyVZdUIZd8nrtX2bQ9b1whPygsYEo0Mzr- CuYfUXg/viewform--- ல் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரம் பெற, வாட்ஸாப் -63791 79200, 044- 22502267, 22505886 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ