உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மானிய விலையில் பசுந்தாள் உரம் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

மானிய விலையில் பசுந்தாள் உரம் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு மானியத்தில் பசுந்தாள் உரம் வழங்க, 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் 2024-- ---25ம் ஆண்டில் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர உற்பத்தி ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தினை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு, இறவை பாசனப் பகுதிகளில் 12,000 ஏக்கரில் 1.20 கோடி ரூபாய் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, பசுந்தாள் உர விதை ஒரு கிலோ விலையான 99.50 ரூபாயில், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2024- -25 ஆண்டில் 104 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை