உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது

கஞ்சா குற்றவாளிகள் களை எடுப்பு ஆர்.கே.பேட்டையில் மூவர் கைது

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனால், போலீசார் தங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். கஞ்சா போதைக்கு அடிமையான சிலர் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். நேற்று முன்திம் இரவு ஆர்.கே.பேட்டை அடுத்த சோமசமுத்திரம் காலனியை சேர்ந்த வினோத், 20. சோளிங்கரை சேர்ந்த திலீப்குமார், 19, சோளிங்கர் நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 19, ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். l திருவள்ளூர் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி மகன் மணிகண்டன், 24. இவர் நேற்று முன்தினம், விஷாலி நகர் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த கடம்பத்துார் போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ