| ADDED : மே 05, 2024 11:00 PM
மீஞ்சூர்: செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.மீஞ்சூர் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளஞைரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் கேரள மாநிலம், மங்கள்பாடி பகுதியை சேர்ந்த அப்துல் நசீர், 29, என்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அதையடுத்து போலீசார் அப்துல் நசீரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.