உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எரிப்பு

குடியிருப்புக்கு மத்தியில் குப்பை எரிப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினமும், மூன்று டன் அளவிற்கு குப்பை சேகரமாகிறது. இதை சேகரிக்க தனியார் டிரஸ்ட் வாயிலாக, 26 துாய்மை பணியாளர்கள் பணி அமர்த்தி சேகரிக்கப்படுகிறது.இந்த குப்பை பழைய பேரூராட்சி அலுவலக பின்புறம் குடியிருப்புகள் மத்தியில், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் குவித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வந்தது.தற்போது சிட்ரபாக்கம் பகுதியில் புதிதாக திடக்கழிவு திட்ட மேலாண்மை திட்ட வளாகம் கட்டப்பட்டு அங்கு குப்பை எடுத்து செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பழைய திட்ட அலுவலகத்தில் மீண்டும் குப்பை போடப்பட்டு, அங்கு எரியூட்டப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டுமென பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.l திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தினமும், மக்கும், மக்காத குப்பை என, 45 ஆகியரம் கிலோ குப்பை சேருகிறது. இந்த குப்பை, அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. நகரில் அதிகரித்து வரும் குப்பையை, கொட்ட இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுக்கு முன், 4.7 ஏக்கர் நிலத்தில், 5.98 கோடி ரூபாயில், குப்பையை உரமாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டது. தலக்காஞ்சேரியில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்த குப்பை, மலை போல் தேங்கி உள்ளது. இந்த குப்பையை 'பயோமைனிங் முறையில் பிரித்து, 3 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த, 2019ல் செயல்படுத்தப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட குப்பை, 'பயோமைனிங்' செய்யப்பட்ட நிலையில், கொரோனா காலத்திற்கு பின், செயல்படுத்தப்படவில்லை.இதனால், மீண்டும் அங்கு, குப்பை மலை உருவாகி விட்டது. சிலர் குப்பையை, தீ வைத்து எரிப்பதால், புகை எழுந்து, அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின்படி, நடவடிக்கை எடுத்ததால், தற்போது குப்பை மலையை சுற்றிலும், மேற்கொண்டு குப்பை கொட்டாத வகையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மீதம் உள்ள குப்பையை, 'பயோமைனிங்' செய்ய, தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை