உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் ரமேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து, சென்னை ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் நடவடிக்கை எடுத்துள்ளார்.நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 1,620 லிட்டர் பால் வெளியில் சென்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரில் நேற்று முன்தினம் காக்களூர் ஆவினில் சோதனை நடந்தது.இதையடுத்து ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமார், ஆவின் துணை மேலாளர் கனிஷா மற்றும் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தருவதற்கு முன் ரமேஷ் குமார் தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்தது தெரிந்தது.இதையடுத்து சென்னை ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித், நேற்று காக்களூர் ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். விழுப்புரம் ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் காக்களூர் பொறுப்பு பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி