| ADDED : மே 28, 2024 05:40 AM
திருத்தணி: திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் 27 சி என்ற அரசு பேருந்து திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சிலி, அத்திமாஞ்சேரிப்பேட்டை வழியாக பள்ளிப்பட்டு வரை இயக்கப்படுகிறது. நேற்று இந்த அரசு பேருந்தை ஓட்டுனர் அஜித், நடத்துனர் குருநாதன் ஆகியோர் இயக்கினர்.திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, இ.என்.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணியரை ஏற்றிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஓட்டுனர் அஜித் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.