உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நடுரோட்டில் பழுதான அரசு பஸ்: பயணியர் அவதி ..

நடுரோட்டில் பழுதான அரசு பஸ்: பயணியர் அவதி ..

கனகம்மாசத்திரம்: திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை கனகம்மாசத்திரம் வழியாக தடம் எண் 97 அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி காலை 8:00 மணிக்கு புறப்பட்டது. 8:40 மணியளவில் கனகம்மாசத்திரம் காவல் நிலையம் எதிரே வந்தபோது பழுது காரணமாக சாலை நடுவே நின்றது. பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்ட பயணியர் புலம்பியபடி இறங்கி அரை மணி நேரம் காத்திருந்து மாற்று பேருந்தில் சென்றனர். பின் ஒன்றரை மணி நேரம் கழித்து 11:00 மணிக்கு பேருந்து பழுது நீக்கப்பட்டு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி