உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் புல் நறுக்கும் இயந்திரம்

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் புல் நறுக்கும் இயந்திரம்

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், 84,500 கால்நடைகளை, விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளுக்கு, 23 கால்நடை மருந்தகம், 6 கிளை நிலையங்கள் மூலம் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.விவசாயிகள் கால்நடைகளுக்கு பசுத்தீவன புல் பயிரிட்டு அதை அறுவடை செய்து வழங்குகின்றனர். இந்நிலையில், தீவன புல் வெட்டி எடுத்து கால்நடைகளுக்கு வழங்கும் இயந்திரம், மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்து திருத்தணி கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் தாமோதரன் கூறியதாவது:மாநில தீவன அபிவிருத்தி திட்டம், 2023 - -24ம் ஆண்டின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம், 30 தீவனபுல் நறுக்கும் இயந்திரம், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.ஒரு இயந்திரத்தின் விலை, 30,750 ரூபாய். இதில், 50 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள், 15,375 ரூபாய்க்கான காசோலை கொடுத்து, இயந்திரம் வாங்கி கொள்ளலாம்.திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு, 14 இயந்திரம் வழங்கப்படும். தேவையான கால்நடை வளர்க்கும் விவசாயிகள், காசோலையுடன் வந்து உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை