உள்ளூர் செய்திகள்

காவலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 62. பஞ்செட்டியில் உள்ள ஜே.சி.பி., பழுது பார்க்கும் மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அவர் மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர். மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை