உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை அட்வைஸ்

கத்திரி வெயில் துவக்கம் சுகாதார துறை அட்வைஸ்

திருவள்ளூர்:கத்திரி வெயில் இன்று துவங்க உள்ள நிலையில், வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என, சுகாதார துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் உருவாகும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தாக்கம் இன்று துவங்குகிறது. இதன் தாக்கம், வரும், 24 வரை இருக்கும்.எனவே, வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்க்காணும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.l சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும். தாகம் வரும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் பருகவும்l அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பது நலம்l காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்l வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது கண்ணாடி, குடை, காலணி அணிந்து செல்ல வேண்டும்l தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்லும் போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை, கழுத்து மற்றும் கைகளை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும்l வீட்டில் தயாரிக்கப்படும் மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மற்றும் லஸ்ஸி ஆகிய குளிர்பானங்களை அருந்த வேண்டும்l கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீரை வழங்கிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

l பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்l சர்க்கரை அதிகமுள்ள திரவங்களையும், மிக குளிர்ந்த பானங்களை அருந்துவதையும் தவிர்க்கவும்l குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களில், வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம்.இவ்வாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்