மேலும் செய்திகள்
ஊர்க்காவல் படையினர் ரத்ததானம்
24-Feb-2025
திருவாலங்காடு:மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நாள் அதிகம் கிடைக்காமலும், சம்பளம் குறைவாகவே வழங்கப்படுவதாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பணியில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.போலீசாருடன் பல்வேறு பணிகளில் இணைந்து செயல்படும் விதமாக, 1962ல் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு என, தனி சீருடை உள்ளது. போலீஸ் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், அந்த பணி கிடைக்காத சூழலில், ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிகின்றனர்.தமிழகத்தில், 16,500 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர். போலீசாரை தேர்ந்தெடுக்கும் அனைத்து தகுதிகளும் இவர்களுக்கும் உண்டு. இவர்கள் போலீசாருடன் இணைந்து டிராபிக் பணி செய்வது, கோவில் திருவிழாக்கள், பொது கூட்டங்கள், வி.ஐ.பி., பாதுகாப்புகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என, ஐந்து காவல் கோட்டங்களில், 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு, 350 பேர் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில், பாதி பேர் பெண்கள்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கு, மாதத்தில் ஐந்து முதல் 10 நாட்கள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாதத்தில் சில நாட்கள் மட்டும் பணி உள்ள நிலையில், கிடைக்கும் ஊதியத்தை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும், பலரும் இதுவரை போதிய சம்பளம் மற்றும் வேலை நாட்கள் கிடைக்காமல் வெளியேறுவதாகவும் கூறுகின்றனர்.சீனியர்கள் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த ஊர்க்காவல் படையினருக்கு, 20 முதல் 30 நாட்கள் கூட வேலை கிடைக்கிறது.தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தி, கூடுதல் நாட்கள் வேலை கொடுத்தால், பொருளாதார ரீதியாக சிரமமின்றி வாழ முடியும்.
ஆர்வத்துடன் ஊர்க்காவல் படையில் சேர்ந்தவர்கள், போதுமான ஊதியம் கிடைக்காததால், வருத்தத்துடன் பணியிலிருந்து விலகி வேறு பணிக்கு சென்று விட்டனர். ஊர்க்காவல் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நாட்களும், ஊதியமும் அதிகமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் எந்தவித நடவடிக்கை இல்லை. மேலும், ஊர்க்காவல் படையினருக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.ஊர்காவல் படை வீரர்,திருவள்ளூர்.
மக்களுக்கு தொண்டாற்றும் பணி செய்து வரும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, மாதத்தில் 20 நாட்கள் வரை பணி வழங்க வேண்டும். மேலும், 560ல் இருந்து 1,000 ரூபாயாக ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, மாதத்தில் 20 நாட்களாவது பணியை வழங்க வேண்டும்.வி.மூர்த்தி 45,சமூக ஆர்வலர்,திருவள்ளூர்.
24-Feb-2025