உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை பார் ஆக மாறிவரும் அவலம்

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை பார் ஆக மாறிவரும் அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே பயணியர் பயன்பாட்டிற்காக கடந்த 2006ம் ஆண்டு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடை இப்பகுதியைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால் விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறி இரவு நேரங்களில் 'பார்' ஆக மாறி வருகிறது. இதனால் இந்த நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விடையூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை