உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த காட்டாவூர் விவசாயிகள் கோரிக்கை

கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த காட்டாவூர் விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் கிராமங்கள் வழியாக, மெதுார் ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கால்வாய் முழுதும் கோரைப்புற்கள் சூழ்ந்து மழைநீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. காட்டாவூர் - உப்பளம் கிராமங்களுக்கு இடையேயான சாலையின் குறுக்கே, இந்த கால்வாய் உள்ளது.மழைநீர் செல்வதற்கும், தடையில்லாத போக்குவரத்திற்காகவும், இங்கு சிறு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது கால்வாயின் அகலத்தைவிட குறுகலாக இருப்பதால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால், 900 ஏக்கர் பரப்பு கொண்ட மெதுார் ஏரிக்கு சீரான மழைநீர் வரத்து இல்லாமல், குறைந்த அளவில் தேங்குகிறது. இந்த ஏரியை நம்பி, 600 ஏக்கர் பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதுடன், பல்வேறு கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பொழிவு இருந்தும், ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கி, கோடைக்கு முன்பாகவே வறண்டு விட்டது.இந்த ஆண்டு பருவ மழை துவங்க உள்ள நிலையில், காட்டாவூர் பகுதியில் உள்ள சிறுபாலத்தை கால்வாய் அகலத்திற்கு விரிவுபடுத்தவும், கால்வாயை சூழ்ந்துள்ள கோரைப்புற்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ