| ADDED : ஜூன் 06, 2024 02:00 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை 9:00 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்ததுஇரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்தார்.நேற்று வைகாசி கிருத்திகை விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனால், மூலவரை தரிசிக்க மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.