உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கும்மிடிப்பூண்டி கிளை நுாலகம்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கும்மிடிப்பூண்டி கிளை நுாலகம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், வசந்த பஜார் சாலையில், குறுகிய இடத்தில், 50 ஆண்டு கால பழமையான கட்டடத்தில், முழு நேர தாலுகா நுாலகம் இயங்கி வந்தது. அதில், 9300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நுாலகத்தில் உள்ள, 58 ஆயிரம் புத்தகங்களை பார்வையில் வைக்க போதிய இடவசதி இல்லாததால், ஏராளமான புத்தகங்களை மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.இட நெருக்கடி மற்றும் இடிந்து விழும் நிலையில் கட்டடம் இருந்ததால், தரை மற்றும் முதல் தளம் சேர்த்து, 2,280 சதுர அடியில் புதிய கட்டடம் நிறுவ, 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பழைய கட்டடத்தை இடித்து அந்த இடத்தில் புதிய கட்டடம் நிறுவும் பணி 2023ல் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கப்பட்டது. கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது பணி முழுமை பெற்று திறப்பு விழாவுக்குகாத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை